தேன்கனிக்கோட்டையில்கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை


தேன்கனிக்கோட்டை, ஏப்.17-
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள காடுமுச்சந்திரம் கிராமப்பகுதியில் நேற்று பகல் ஒற்றை காட்டுயானை ஒன்று சர்வ சாதரணமாக உலா வந்தது. அருகிலுள்ள குல்லட்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய இந்த காட்டுயானை கடும் கோபத்துடன் நடந்து சென்றது. இதனால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வயல்வெளிகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து கிராமமக்கள் இதுகுறித்து தேன்கனிகோட்டை வனச்சரகர் சுகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து அவரது தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காடுமுச்சந்திரம் கிராமத்திற்கு சென்று பட்டாசுகள் வெடித்து ஒற்றை காட்டுயானையை குல்லட்டி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்த ஒற்றை காட்டுயானைக்கு காது கேட்காத குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது.