
ஈரோடு செப். 8
கடத்தூர் கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளிச்கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். மேலும் கோபி அருகே கூகலூரில் உள்ள மீனாட்சி அம்பிகா சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியைெயாட்டி காலபைரவருக்கு பால், தயிர், எலுமிச்சை பழச்சாறு, விபூதி, சந்தனம், குங்குமம், வாசனை திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி காலபைரவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை சாற்றப்பட்டிருந்தது.
இதேபோல் கோபி மொடச்சூர் சோமேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதி, காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதி, கோபி பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.