தேர்தல் அரசியலில் இருந்து விலகிய வீரப்ப மொய்லி

பெங்களூரு, ஏப். 11-
கர்நாடகாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான வீரப்ப மொய்லி (84) அம்மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.இருப்பினும் இந்த முறை அதே தொகுதியில் போட்டியிட‌ விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் கட்சி மேலிடம் அவருக்கு சீட் வழங்கவில்லை. இதனால் வீரப்ப மொய்லி அதிருப்தி அடைந்தார். .இந்நிலையில் வீரப்ப மொய்லி, ‘’காங்கிரஸ் தான் எனக்கு அமைச்சர், முதல்வர், மத்திய அமைச்சர் என அனைத்து பதவிகளையும் வழங்கியது. என்னை அரசியலில் பல நேரங்களில் உயர்த்தியது. அந்த கட்சிக்கு நான் என்றைக்கும் உண்மையாக இருப்பேன். வயோதிகத்தின் காரணமாக‌ அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” என்றார்.