தேர்தல் முடிவுக்குப் பிறகு கர்நாடக மந்திரிசபையில் மாற்றம்

பெங்களூர்: மே. 20 – பாராளுமன்ற தேர்தல்கள் முடிவுகளை தொடர்ந்து மாநிலத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்ய காங்கிரஸ் கட்சி மேலிடம் யோசித்து வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற எதிர்கால நிலைமை தெரியும் முனனரே அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுக்கள் நம் மாநிலத்தில் துவங்கியுள்ளன. மாநிலத்தில் 1999க்கு பின்னர் நடந்த எந்த பாராளுமன்ற தேர்தலிலும். காங்கிரஸ் இரண்டு இலக்கங்களை பெறவில்லை. இந்த முறை இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவது குறித்து கட்சி மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளது. இதில் மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ள உத்தரவாத இலவச திட்டங்கள் கை கொடுத்தால் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை கட்சிக்கு உள்ளது. ஒருவேளை வெறும் ஒற்றிலக்க இடங்களையே காங்கிரஸ் கைப்பற்றினால் இது கட்சிக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கும். இப்படி எத்தகைய முடிவு வந்தாலும் அமைச்சரவை மாற்றப்பட்டாகவேண்டும். ஜூன் 4 க்கும் பின்னர் இது குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.காங்கிரஸ் கட்சி இந்த முறை வேட்பாளர்கள் குறைபாடுகள் இருந்ததால் அமைச்சர்களின் வாரிசுகள் , மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்கி களத்தில் இறக்கியது. குடும்ப அரசியல் குற்றச்சாட்டு வந்தபோதிலும் மற்றொரு முறையாக காங்கிரஸ் கட்சி இந்த முயற்சியை மேற்கொண்டது. இந்த வேட்பாளர்களை வெற்றி பெற்று கொண்டுவரும் பொறுப்பு அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இதில் தோல்வி பெரும் அமைச்சர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரியவருகிறது. ஆனால் அத்தகைய நேரத்தில் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை விட்டு கொடுக்க தயாராக இருக்க வேண்டும். இதனால் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள் தங்கள் பதவியை இழக்கின்றார்களா அல்லது கூடுதல் பொறுப்புக்களை ஏற்பார்களா என்பதற்கு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பதிலளிக்க உள்ளது. அமைச்சரவை குடும்ப உறுப்பினர்கள் தேர்தலில் தோல்வியுற்றால் சந்தேகமே இல்லை. அத்தகைய அமைச்சர்கள் இதற்கான நேரடி பொறுப்பு ஏற்கவுள்ளனர் . இதனால் தானாகவே அமைச்சரவை மாற்றியமைக்கும் நிலைமை உருவாகிவிடும். பாராளுமன்ற தேர்தலுக்கு டிக்கெட் வழங்கும் போது நான்கு சுவர்களுக்குள் கொடுத்த அறிவுறுத்தலின்படி இந்த தேர்தலின் வெற்றி அல்லது தோல்வி அமைச்சர்களின் எதிர்காலத்தையும் முடிவு செய்வதாயிருக்கும். இது காங்கிரஸ் கட்சியின் மேலிட அளவில் மேற்கொண்டுள்ள முடிவு. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களைவிட அமைச்சர்கள் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர். கட்சி மேலிடத்திற்கு இந்த எண்ணம் ஏற்கெனவே இருப்பதால் அமைச்சர்களுக்குள் இப்போதே பதட்டம் நிலவ தொடங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த பின்னரும் தங்கள் பதவிகளை காத்துக்கொள்ள எத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது என்பதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர். அரசு ஒரு ஆண்டை பூர்த்தி செய்துள்ள நிலையில் இந்த காலகட்டத்தில் அந்தந்த அமைச்சகங்கள் செய்த பணிகள் குறித்து பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அனைத்து அமைச்சர்களும் தங்கள் துறையில் மிக சிறப்பான பணிகள் நடந்துள்ளதாக காட்டி கொள்ளும் முயற்சிகளில் உள்ளனர். சாமான்யமாக அரசு இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னர் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை முன்னிட்டு இந்த அமைச்சரவை மாற்றும் இருப்பதுடன் இதனால் அமைச்சர் பதவி எதிர் நோக்கி காத்திருப்பவர்களின் ஆதங்கமும் அதிகமாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் மாநில அரசின் நிலைமை என்ன ஆகும் என்ற ஆதங்கம் இருந்த போதிலும் அதிக பெரும்பான்மையுள்ள ஆட்சியை எவராலும் எதுவும் செய்து விட முடியாது என்ற கருத்தும் கட்சியினரிடையே உள்ளது. காங்கிரஸ் 10க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றால் சிறிய அளவில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும். ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு 10க்கும் குறைவான இடங்களில் வெற்றி கிடைத்தால் அமைச்சரவையில் பெரிய மாறுதல்கள் செய்யப்படும்.