
கலபுரகி : நவம்பர். 12 – கே இ ஏ தேர்வுகள் மோசடிகள் முக்கிய குற்றவாளி ஆர் டி பாட்டில் உட்பட மூன்று குற்றவாளிகளை நீதிமன்றம் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் விசாரணைகளுக்காக குற்றவாளிகள் ஆர் டி பாட்டில் , சந்தோஷ் மற்றும் சலீம் ஆகியோரை போலீஸ் காவலுக்கு ஒப்படைக்குமாறு விசாரணை அதிகாரிகள் கோரியிருந்தனர் .ஆனால் இரண்டாவது ஜெ எம் எப் சி நீதிமன்ற நீதிபதி ஸ்மிதா குற்றவாளிகளை போலீஸ் காவலுக்கு அனுப்பாமல் நீதிமன்ற காவலுக்கு ஒப்படைத்துள்ளார். அசோக் நகர் போலீசார் இந்த மோசடி குறித்து முக்கிய குற்றவாளி ஆர் டி பாட்டிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்னர் இட பரிசோதனைகள் மேற்கொண்டனர். அதன் பின்னர் கலபுரகி ஜிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். கடந்த அக்டோபர் 28 அன்று கலபுரகி மற்றும் யாதகிரி தேர்வு மையங்களில் மாணவர்கள் கர்நாடக தேர்வு ஆணையம் நடத்திய தேர்வுகளை எழுத ப்ளூ டூத் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணையை மாநில அரசு சி ஐ டிக்கு ஒப்படைத்து உத்தரவிட்டது. இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 109, 114 , 120பி மற்றும் வேறு சில பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை உடனே மேற்கொள்ளுமாறு கூடுதல் போலீஸ் உயர் இயக்குனர் ஆர் ஹிதேந்திரா உத்திரவிட்டிருந்தார்.