தேவகவுடா கடிதம் குறித்து பரிசீலனை

பெங்களூர்: ஜூன். 21 – பாடங்கள் திருத்தி அமைக்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் பிரதமர் ஹெச் டி தேவேகௌடா எழுதியுள்ள கடிதத்தை தீவிரமாக பரிசீலிப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருப்பதுடன் இது குறித்து மாநில கல்வி துறையுடன் ஆலோசனை நடத்தி என்னவெல்லாம் மாற்றங்கள் செய்ய இயலுமோ அனைத்தையும் செய்வோம் என்றார். ஆர் டி நகரில் உள்ள தன் வீட்டில் இன்று செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில் முன்னாள் பிரதமர் நம் அனைவருக்கும் மூத்தவர் . அவர் பாட புத்தகங்கள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். நான் நாளை கல்வி துறை பிரமுகர்களிடம் இது குறித்து ஆலோசிப்பேன். தேவேகௌடா எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சத்தை முழுதுமாக பரிசீலிப்போம். அவர் என்னவெல்லாம் ஆலோசனைகள் வழங்கியுள்ளாரோ அவற்றை தீவிரமாக பரிசீலிப்போம். அவருக்கு பதிலையும் கௌரவத்துடன் எழுதி அனுப்புவோம் என்றார் . இதே சமயத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் மாநில விஜயம் குறித்து குற்றங்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர், கொரோனா சமயத்தில் மோதியின் ஆளுமை பற்றி உலகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி மற்றும் சுகாதார உபகரணங்களின் உற்பத்தி குறித்து மற்ற நாடுகளுக்கு நம் நாடு உதவியிருப்பது குறித்து மக்களுக்கு மிக தெளிவாகவே தெரியும். அரசியலுக்காக பேச வேண்டும் என பேசினால் அதற்க்கு அர்த்தம் இல்லை. மக்களுக்கு அனைத்தும் நினைவில் உள்ளது. மோதியின் பாராட்டுக்கள் எங்களுக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. நான் இனி கூடுதல் பொறுப்புடன் பணியாற்ற அவருடைய பாராட்டுகள் ஷக்தி தந்துள்ளது இவ்வாறு முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.