பெங்களூர், அக்.2-
பிஜேபி கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்த பின், முதல் முறையாக கட்சி எம்எல்ஏக்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஜேடிஎஸ் கட்சியின் மேலிட தலைவர் எச்.டி. தேவேகவுடா, தலைமையில் கூட்டம் நடந்தது.
கட்சிக்குள் உள்ள அதிருப்தியையும் குழப்பத்தையும் குமாரசாமி பேசுகையில் வெளிப்படுத்தினார். பிடதி அருகே கெட்ட கானஹள்ளியில் உள்ள குமாரசாமியின் பண்ணை வீட்டில் இந்த கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பிஜேபியுடன் கூட்டணி சேர வேண்டிய அவசியம் குறித்து அவரிடம் நம்பிக்கை வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதோடு மதசார்பற்ற சமத்துவ கட்சிக்கு எக்காரணம் கொண்டும் துரோகம் செய்ய மாட்டார்கள் என கூட்டு உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.
கூட்டணிக்கு பின் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கும் தலைவர் சி.எம். இப்ராஹிம் விலகி இருந்தார். கூட்டத்தில் அவர் இல்லாதது வெளிப்படையாக தெரிந்தது.
ஜே டி எஸ் கட்சியின்18 எம்எல்ஏக்களில் குருமிட்கல் எம்எல்ஏ சரண் கவுடா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஹனூர் எம்எல்ஏ மஞ்சுநாத் தனது தனிப்பட்ட காரணத்தால் பங்கேற்கவில்லை.கூட்டணி தொடர்பாக யாரையும் இருட்டில் விடவில்லை. வைத்திருக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. கட்சியின் தத்துவம் மற்றும் சித்தாந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என தேவகவுடாவும் குமாரசாமியும் தெளிவுபடுத்தி உள்ளனர்.
இப்ராஹிம் தனது அவதூறு மற்றும் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு மறைமுகமாக பதில் அளிக்கப்பட்டது. பிஜேபி கூட்டணி தொடர்பாக மற்றும் குமாரசாமி எடுத்த முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப் பட்டு உள்ளோம். தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்த தேர்தலை சந்திப்போம் என ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளனர்.பிஜேபி கூட்டணி அமைத்ததற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 31 மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தி அனைத்து பிரச்சனைகளுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வு காணப்படும்.கூட்டணியில் எங்கள் வேட்பாளர்களுக்கு சீட் பிரச்சனை இல்லை. இதற்கு குமாரசாமி உறுதி அளித்தார்.கூட்டணி மூலம் மாநிலத்தின் நலன் உள்ளது. வெகுண்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட உள்ளன. கூட்டணி தனது சுயநலத்துக்காக அல்ல. கூட்டணி மூலம் ஆட்சிக்கு வருவது எனது நோக்கமும் அல்ல என்று குமாரசாமி கூறினார். ஓட்டுக்காக எந்த ஒரு சமுதாயத்தையும் கவர முடியாது .நான் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கவில்லை .எந்த சமூகமும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படுவதில்லை. என் அர்ப்பணிப்பு சமுதாய மக்களுக்கு தெரியும் .
காங்கிரஸ் போன்று வெற்று வாக்குறுதிகளை என்னால் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் செய்தியாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.