தேவகவுடா வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த முதல்வர்

பெங்களூர்: செப்டம்பர். 21 – முன்னாள் பிரதமர் ஹெச் டி தேவேகௌடாவின் வீட்டிற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் சென்று அவருடைய உடல் நலன் குறித்து விசாரித்தார் . பத்மநாபநகரில் உள்ள தேவேகௌடாவின் வீட்டுக்கு சென்ற முதல்வருடன் அமைச்சர்கள் ஜெ சி மதுசாமி , ஆர் அசோக் , பைரதி பசவராஜ் , கே கோபாலய்யா , வி சோமண்ணா , முனிரத்னயா ஆகியோர் இருந்தனர். இந்த சந்திப்பின்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தேவேகௌடாவிடம் நீங்கள் இப்போதும் கேழ்வரகு களியை சாப்பிடுகிறீர்களா என கேட்டார் . பின்னர் முதல்வர் , அமைச்சர்கள் என அனைவரும் தேவேகௌடா வீட்டில் கேழ்வரகு களி உணவு அருந்தினர். நேற்று முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா தேவேகௌடாவின் வீட்டிற்கு சென்று உடல் நலம் விசாரித்தார். அதே போல் மாநில எதிர் கட்சி தலைவர் சித்தராமையா ஆறு வருடங்களுக்கு பின்னர் தேவேகௌடா வீட்டிற்கு நேற்று சென்று நலம் விசாரித்துள்ளார்.