தேவர கட்டு உற்சவத்தின் போது3 பக்தர்கள் பலி 100 பேர் காயம்

கர்னூல் (ஆந்திர பிரதேசம் ) : அக்டோபர் . 25 – நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடக்கும் தேவர கட்டு உற்சவத்தின் போது மூன்று பேர் உயிரிழந்திருப்பதுடன் நூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள சம்பவம் இம்மாவட்டத்தில் நடந்துள்ளது. விஜயதசமி தினத்தன்று இங்குள்ள தேவரக்கட்டு மலையில் ஒவ்வொரு ஆண்டும் பன்னி உற்சவம் நடந்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த உற்சவத்தில் பங்கு கொள்வர். இந்த வகையில் இந்தாண்டு பல லட்ச கணக்கில் பக்த்ர்கள் இந்த உற்சவத்தில் பங்கு கொண்டனர்.
இந்த உற்சவத்தின் போது உற்சவ மூர்த்தி ஊர்வலமாக எடுத்து வருவார் . அப்போது பல நூற்று கணக்கான மக்கள் இந்த ஊர்வலத்தில் பங்கு கொள்வர். இந்த நிலையில் நேற்று நடந்த இந்த ஊர்வலத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தவிர நூற்றுக்கும் அதிகமானோர் காயங்களடைந்துள்ளனர்.இங்குள்ள தேவரகட்டு மலையில் நேற்று மல்லம்மா மற்றும் மல்லேஸ்வர ஸ்வாமி யாத்திரை நடந்தது. இரவு 12 மணியளவில் மல்லம்மா மற்றும் மல்லேஸ்வர ஸ்வாமியின் திருமணம் நடைபெற்றது .
பின்னர் ஊரின் சுற்றுப்பகுதியிலிருந்து பல்வேறு உற்சவ மூர்த்திகளின் ஊர்வலம் நடைபெற்றது . அப்போது ஆறு கிராமங்களை சேர்ந்த ஒரு குழு மற்றும் மூன்று கிராமங்களை சேர்ந்த ஒரு குழு என விழா நிகழ்ச்சிகளை நடத்தினர். இதை பண்ணி உற்சவம் என அழைக்கிறார்கள் . இந்த உற்சவத்தில் லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கு கொண்டனர். பின்னர் இரண்டு கோஷ்டிகளும் ஒருங்கிணைந்து விழாவை கொண்டாடினர். இந்த விழாவை பர்கா ஆந்திரா , தெலுங்கானா மட்டுமின்றி கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மக்கள் ஒன்று சேர்வர். இத்தகைய அளவில் மக்கள் ஒன்று சேர்வதை முன்னிட்டு மாவட்ட போலீசாரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டு அனைத்து இடங்களிலும் சி சி டி வி kaamirakala பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும் பொது மக்கள் தங்கள் மூட நம்பிக்கையால் நடனமாடியதில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதுடன் பலர் காயங்களடைந்துள்ளனர்.