தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு ஒருவர் சாவு

வாஷிங்டன், ஜூன் 17
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்குநாள் பெருகி வருகிறது. திடீர் துப்பாகிச்சூடுகளால், அங்கு பலர் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தனர். இருவர் படு காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் வெஸ்டாவியா ஹில்ஸ் நகரில் உள்ள செயின்ட் ஸ்டீபன் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தில் இரவு உணவு விருந்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக தேவாலயம் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையால் 20,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று துப்பாக்கி வன்முறைக் காப்பகம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் தற்கொலை மரணங்களும் அடங்கும்.