பெங்களூர் செப்.28-
பெங்களூர் பல்கலை க்கழக நிர்வாகக் குழுவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும், இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை துணைவேந்தரும் கர்நாடக மாநில கவர்னருமான தாவர் சந்ந் கெலாட் ஒப்புக்கொண்டுள்ளார்.
கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும்இவ்விழாவை நாளை 29ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது .
ஆனால் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விழாவை வேறொரு நாளுக்கு நடத்த ஒத்திவைக்கப்பட்டது.
விண்வெளி துறையில் சாதனை படைத்ததற்காக
இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கும் விவசாயின் மகனாக பிறந்து, உயர்ந்த பதவிக்குச் சென்று ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல, கடந்த ஜூலை மாதம் குவெம்பு பல்கலைக்கழகத்தில் மூன்று பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதனுடன் 141 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது.
உடுப்பி சதானந்த செட்டி கல்கெரி ராஜகுரு குருசாமி, ஹொளலக்கரே எம். சந்திரப்பா ஆகியோருக்கு இசைத்துறையில் சாதனை படைத்ததற்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இந்த விழாவிலும் பல்கலைக்கழக வேந்தர் கவர்னர் தாவர் சந்ந் கெலாட் பங்கேற்று சிறப்பித்தார். எடியூரப்பாவுக்கும் அறுவடை கொண்டாட்டம்- 8 என்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆறு மாணவர்களுக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.