தேவ கவுடாவை அழைக்காதது குறித்து அமைச்சர் விளக்கம்

பெங்களூர்: நவம்பர். 12 – நாடபிரபு கெம்பெகௌடாவின் 108 அடி உயர வெண்கல சிலையை நாட்டிற்கு அற்பணிக்கும் விழாவிற்கு முன்னாள் பிரதமர் ஹெச். டி தேவேகௌடாவை முதல்வரே நேரில் அழைத்து மற்றும் போன் வாயிலாக பேசி மற்றும் கடிதம் வாயிலாகவும் அழைப்பு விடுத்துள்ளார் என மாநில உயர் கல்வி அமைச்சர் அஸ்வத்நாராயணா இன்று விளக்கம் அளித்துள்ளார். இந்த விஷயத்தில் தங்களின் தவறு எதுவும் இல்லை எனவும் கெம்பேகௌடா சிலை நிறுவன துணைத்தலைவராகியுமுள்ள அஸ்வத்நாராயணா விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் நடந்திருப்பது கெம்பேகௌடா தொடர்பான நிகழ்ச்சி. எங்களுக்கு கெம்பெகௌடா முக்கியம் ,அவ்வளவே .. தவிர இந்த நிகழ்ச்சிக்கு எவ்வித அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்படவில்லை. தவிர முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் தேவேகௌடா உட்பட முன்னாள் முதல்வர்களை அழைத்துள்ளார். என அமைச்சர் அஸ்வத்நாராயணா விளக்கம் அளித்துள்ளார். சிலையின் நிறுவன பூஜைகள் , மற்றும் சிலையின் திறப்பு விழாவிற்கு தானே நேரில் தேவேகௌடாவிற்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்றும் கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் அஸ்வதநாராயணா பதிலளித்தார்.