தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

சமஸ்திபூர்: அக். 25-
பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) வரலாறு காணாத வெற்றி பெறும். அனைத்து தேர்​தல் சாதனை​களை​யும் என்​டிஏ முறியடிக்​கும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.
வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி அந்த மாநிலத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். பிஹாரின் சமஸ்​திபூர், பேகுச​ரா​யில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக அவர் வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:
பிஹார் முன்​னாள் முதல்​வர் கர்ப்​பூரி தாக்​குருக்கு கடந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்​கப்​பட்​டது. அவரது வழி​காட்​டு​தல்​களின்​படி ஏழைகளின் முன்​னேற்​றத்​துக்​காக என்​டிஏ அரசு அயராது பாடு​பட்டு வரு​கிறது.பிஹார் மாநிலத்தை சேர்ந்த 1.2 கோடி பெண்​கள் சுய தொழில் தொடங்க அவர்​களின் வங்​கிக் கணக்​கு​களில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்​யப்​பட்டு உள்​ளது. குறு, சிறு விவ​சா​யிகளுக்கு நிதி​யுதவி மற்​றும் இளஞர்​களின் வேலை​வாய்ப்​புக்​காக பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. பிஹாரில் ஏழைகள், பட்​டியலின, பிற்​படுத்​தப்​பட்ட, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட சமு​தாய மக்​களின் முன்​னேற்​றத்​துக்​காகவும் பல்​வேறு திட்​டங்​கள் செயல்படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.பல ஆயிரம் கோடி ஊழல் வழக்​கு​களில் தொடர்​புடைய ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் கட்​சிகளின் தலை​வர்​கள் ஜாமீனில் வெளியே நடமாடு​கின்​றனர். அவர்​கள் அமைத்​திருப்​பது மெகா கூட்​டணி கிடை​யாது. மெகா ஊழல்​வா​தி​களின் கூட்​டணி ஆகும்.
பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் மாநில மக்​களின் முன்​னேற்​றத்​துக்​காக இரவு, பகலாக உழைத்து வரு​கிறார். அவரது தலை​மை​யில் மாநிலத்​தின் அனைத்து பகு​தி​களும் சமச்​சீ​ராக முன்​னேற்​றம் அடைந்து வரு​கின்றன. வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் சந்​திப்​போம்.ஆர்​ஜேடி, காங்​கிரஸின் மூத்த தலை​வர்​களுக்கு மக்​கள் நலனில் துளி​யும் அக்​கறை கிடை​யாது. தங்​கள் குடும்ப நலன்​களில் மட்​டுமே அவர்​கள் அக்​கறை செலுத்​து​வார்​கள். தேசிய அளவில் மிகப்​பெரிய ஊழல் குடும்​ப​மாக காங்​கிரஸ் தலை​மை​யின் (சோனியா காந்​தி) குடும்​பம் உள்​ளது. இதே​போல பிஹார் அளவில் மிகப்​பெரிய ஊழல் குடும்​ப​மாக ஆர்​ஜேடி தலை​மை​யின் (லாலு பிர​சாத்) குடும்​பம் விளங்​கு​கிறது. இரு குடும்​பங்​களை சேர்ந்​தவர்​களும் ஊழல் வழக்​கு​களில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்​துள்​ளனர்.கடந்த 20 ஆண்​டு​களாக பிஹார் தேர்​தலில் ஆர்​ஜேடி வெற்றி பெற​வில்​லை. ஆர்​ஜேடி​யின் கடந்த கால காட்​டாட்​சியை மக்​கள் ஒரு​போதும் மறக்க மாட்​டார்​கள். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி வரலாறு காணாத வெற்றி பெறும். அனைத்து தேர்​தல் சாதனை​களை​யும் முறியடிக்​கும்.இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.