தொகுப்பூதியம் உயர்வு

சென்னை, மார்ச்.16-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளியில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியமும் ரூ. 18 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.