தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூர் : ஜனவரி. 6 – வெடிகுண்டு மிரட்டல் குறித்த இ மெயில் தகவல் நகரின் விஸ்வேஸ்வரய்யா மியூசியம் மட்டுமின்றி நாட்டின் 20க்கும் மேற்பட்ட ம்யூசியம்களுக்கு வந்துள்ள நிலையில் இது போலீசாருக்கு பெரும் தலைவலியாகியுள்ளது. விஸ்வேஸ்வரய்யா மியூசியம் மற்றும் ஜவஹர்லால் தொலை நோக்கு கோளரங்க மையம் உட்பட மாநிலத்தின் தலைநகரில் மூன்று ம்யூசியம்களுக்கு மிரட்டல் தகவல் வந்துள்ளது. இதே போல் மும்பையில் உள்ள பொருக்காட்சிசாலைக்கும் இ மெயில் வாயிலாக வெடி குண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. இந்த மிரட்டல்கள் குறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலாபாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மியூசியம் , மற்றும் ஒர்லியில் உள்ள நேரு விஞ்ஞான மையம் உட்பட நாட்டின் முக்கிய ம்யூசியங்களுக்கு இந்த மிரட்டல்கள் வந்துள்ளது. நேற்று அதிகாலை இந்த மிரட்டல் இ மெயில் வந்த உடனேயே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மும்பை நகரில் மட்டுமே எட்டு ம்யூசியம்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக அனைத்து ம்யூசியம்களுக்கும் தனி இ மெயில் தகவல் அனுப்பியிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்னர் மியூசியம் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் கொலபா போலீஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாதவர்களுக்கு எதிராக இ பி கோ 505 (ஏ) , 506(2) , 182 ஆகிய சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் கொல்கத்தாவின் இந்தியா ம்யூஸியத்திற்கும் இது போன்ற மிரட்டல் வந்த நிலையி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு பார்வையாளர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இத்தனை கலபரங்களிக்கிடையும் நாட்டில் எந்த இடத்திலும் எவ்வித வெடி குண்டுகளும் வைக்கப்படவில்லை என்பது போலீஸ் சோதனையில் தெளிவாகியுள்ளது. இந்த நிலையில் இ மெயில் வந்த மூலம் குறித்து தற்போது சைபர் போலீசார் மிக தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
நகரில் நாளுக்கு நாள் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று தான் நகரின் மியூசியத்திற்கு வெடி குண்டு மிரட்டல் வந்த நிலையில் நகரின் கன்னிங்காம் வீதியில் உள்ள தேசிய பங்கு சந்தை மையத்திற்கு வந்து வெடி குண்டு மிரட்டலால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகள் ஜனவரி 3 அன்று மும்பையில் உள்ள தேசிய பங்கு சந்தை விற்பனை அலுவலத்திற்கு போன் செய்து பெங்களூரின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். உடனே தேசிய புலணாய்வு துறை அதிகாரிகள் நள்ளிரவு ஒரு மணியளவில் விதான சௌதா போலிஸாருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர் . உடனே நகர போலீசாரும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று சோதனைகள் மேற்கொண்டனர். ஆனால் அங்கு எவ்வித வெடி மருந்துகள் அல்லது பொருள்கள் தென்படவில்லை என போலீஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது . நகரின் விஸ்வேஸ்வரய்யா கண்டாட்சியாகத்திற்கு இ மெயில் வாயிலாக வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. இந்த மையத்தி பல வெடிகுண்டுகள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் காலை அனைத்தும் வெடிக்கபயோகின்றன என்றும் தகவலில் வந்திருந்தது. தவிர சில தீவிரவாத இயக்கங்களின் பெயர்களையும் இந்த தகவலில் தெரிவித்து மிரட்டல் விடுத்திருந்தனர். இது குறித்து விச்வேவரய்யா கண்காட்சி ஊழியர்கள் உடனே நகர போலீசாருக்கு தங்கள் அளித்துள்ளனர். உடனே போலீசாரும் விரைந்து சென்று அங்கு ஆய்வுகள் நடத்தியுள்ளனர். பின்னர் இது வெறும் மிரட்டல் மெயில் என தெரியவந்துள்ளது.இது குறித்து கப்பன் பூங்கா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு மாநில முதல்வர் சித்தராமையா போலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.