தொடர்ந்து முன்னேறும் ரஷ்யா

கீவ், உக்ரைனில் மரியுபோல் நகரின் கடைசி கோட்டை போல அமைந்திருந்த உருக்காலை வீழ்ந்து விட்டது. அந்த உருக்காலையின் இடிபாடுகளில் இருந்து டஜன் கணக்கிலான உக்ரைன் படை வீரர்களின் உடல்கள் இப்போது மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் காண்பதற்காக அந்த உடல்களில் பெரும்பாலானவை தலைநகர் கீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட உடல்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கெர்சனில் பொதுவாக்கெடுப்பு உக்ரைனின் மற்றொரு நகரமான கெர்சனும் ரஷியா வசம்போய் இருக்கிறது. இந்த நகரத்தை ரஷியா, தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இது தொடர்பாக ரஷியா ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தும் என்று அந்த நாட்டினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கான சமிக்ஞை காட்டப்பட்டுவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நகரம்தான் ரஷியாவின் பிடியில் சிக்கிய முதல் நகரம். இங்கு பொது வாக்கெடுப்பு நடத்தி ரஷியா தன்னுடன் இணைத்துக்கொள்ளும் தற்போது இந்த நகரில் ரஷிய நாணயமான ரூபிளை புழக்கத்தில்விட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுபற்றி ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு கூறுகையில், “லுஹான்ஸ்கின் 97 சதவீத பகுதி விடுவிக்கப்பட்டு விட்டது. செவிரோடொனெட்ஸ்க் நகரில் குடியிருப்பு பகுதிகள் ரஷியா கையில் வந்துவிட்டன. தொழில்துறை பகுதிகளை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என தெரிவித்தார்.

https://www.dailythanthi.com/News/World/live-update-russia-holds-97-percent-of-the-luhansk-region-717632