தொட்டபள்ளாபூர்-ஹோசகோட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

பெங்களூரு, நவ. 10: நவ. 17 முதல் தொட்டபள்ளாபூர்-ஹோஸ்கோட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர உள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், மற்ற வாகனங்களுக்கு கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது குறித்து என்எச்ஏஐ திட்ட இயக்குநர் ஜெயகுமார் கூறியது: பெங்களூரு சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) ஆனது கர்நாடகாவின் முதல் சாவடி இல்லாத டோல் பிளாசாவைக் கொண்டிருக்கும். அதாவது ஆள் இல்லாத டோல் கவுண்டர்கள் இருக்கும்
சுங்கச்சாவடியில் இருந்து 50 மீட்டருக்குள் சென்றவுடன் வாகனத்தின் நம்பர் பிளேட் மற்றும் எடை ஸ்கேன் செய்யப்படும்.
ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தி மற்ற அனைத்தும் ஒழுங்காக இருந்தால், தடுப்பு திறக்கப்பட்டு வாகனம் வெளியே விடப்படும்.
ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் சுங்கக் கட்டணத்தை பணமாக செலுத்த ரவுண்டானா செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட எடையில் 105% எடுத்துச் செல்பவர்களுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு, தொடர அனுமதிக்கப்படுவதற்கு முன் எடையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
42-கிமீ டாபஸ்பேட்டை-தொட்டபள்ளாபூர் பிரிவு 90% நிறைவடைந்துள்ளது
மற்றும் ஜனவரி 2024 இல் தயாராகும். மேலும் பிப்ரவரியில் கட்டண வசூல் தொடங்கும்.
21 கிமீ நீளமுள்ள ஹோஸ்கோட்டை-தமிழ்நாடு எல்லைப் பகுதியின் கட்டுமானப் பணிகள் 13% நிறைவடைந்துள்ளன.
தமிழ்நாட்டு எல்லை-ஒபலாபுரா பாதை (179.93 கிமீ) கட்டுமானம் ஏலத்தில் உள்ளது.சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், மற்ற வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்படும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.