தொண்டர்களுக்கு முன்னுரிமை

பெங்களூர் நவம்பர் 11
கர்நாடக மாநிலத்தில் பூத் மட்டத்தில் பிஜேபி கட்சியை பலப்படுத்துவேன் என்றும் தொண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கட்சியின் புதிய மாநில தலைவர் விஜயந்திரா கூறினார். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எதிர்பார்க்கின் மகன் கஜேந்திரா நேற்று இரவு கர்நாடக மாநில புதிய பிஜேபி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்ட மறுநாளே அதாவது இன்று கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
கர்நாடக மாநிலம் முழுவதும் பூத் மட்டத்தில் பிஜேபியை பலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவேன் என்று கர்நாடக மாநில பிஜேபி கட்சியின் புதிய தலைவர் விஜயந்திரா கூறினார். கர்நாடக மாநில புதிய பிஜேபி தலைவராக விஜயந்திரா நேற்றிரவு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் பெங்களூர் காந்திநகர் 40வது பூத் கமிட்டி பிஜேபி தலைவர் சுசீந்திரன் வீட்டுக்கு சென்றார். அவருக்கு இனிப்பு ஊட்டி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து அவர் கூறியதாவது. கர்நாடக மாநில பிஜேபியில் பூத் கமிட்டி தலைவர்கள் கட்சியின் உயிர்நாடியாக உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் 58,282 வாக்கு சாவடிகள் உள்ளன.
அனைத்து பூத்களிலும் கட்சி அமைப்பு பலப்படுத்தப்படும். மேலும் கர்நாடக மாநிலம் முழுவதும் பிஜேபி வளர்ச்சி அடையும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பேன் போராட்ட குணம் பிஜேபியின் அடிப்படை தகுதியாக உள்ளது எனவே மாநில அரசின் தவறுகளை தட்டிக் கேட்டு போராட்டங்கள் நடத்தும் அதே சமயத்தில் கட்சியை பலப்படுத்தி ஜனநாயக ரீதியில் வெற்றி பெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றார்.