தொண்டையில் சாக்லேட் சிக்கி சிறுமி சாவு

உடுப்பி: ஜூலை. 20 – சாக்லேட் தொண்டையில் சிக்கி கொண்டதன் விளைவாய் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவள் இறந்துள்ள சம்பவம் உடுப்பி நகரின் பைந்தூரு தாலுகாவில் நடந்துள்ளது. இறந்து போன சிறுமி பைந்தூரு தாலூகாவின் பிஜோரு கிராமத்தை சேர்ந்த சுப்ரிதா பூஜாரி என்பவரின் ஆறு வயது சிறுமி சமன்வியாவார். பள்ளிக்கு தயாராகிக்கொண்டிருந்த சமன்விக்கு வீட்டில் உள்ளவர்கள் சாக்லேட் கொடுத்து அனுப்பிய நிலையில் பள்ளிக்கூட பஸ் வந்துவிட்ட அவசரத்தில் சிறுமி சாக்லெட்டை உரையுடன் சேர்த்து வாயில் போட்டுகொண்டு பள்ளி வாகனம் நோக்கி ஓடியுள்ளாள். அப்போது சாக்லட் தொண்டை குழியில் சிக்கி கொண்டதில் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளாள். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து தயாராகிக்கொண்டிருந்தாள் ஆனால் சமன்விக்கு பள்ளிக்கு செல்ல விருப்பம் இருக்கவில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவளை சமாதான படுத்தி கையில் சாக்லேட் கொடுத்துள்ளனர். அதற்குள்ளாகவே பள்ளி கூட பஸ் வந்து விடவே அவசரத்தில் கையில் இருந்த சாக்லெட்டை உரையுடன் வாயில் போட்டு கொண்டு பள்ளி வாகனம் நோக்கி அவள் ஓடியபோது மூச்சு தடுமாறி அங்கேயே விழுந்துள்ளாள். பள்ளி வாகன ஓட்டுநர் இவளுக்கு மூச்சை தருவிக்க முயற்சித்தும் சிகிச்சை பலனளிக்காமல் உடனே சிறுமியை பைந்தூரு தனியார் மருத்துவமைக்கு கொண்டு சென்றும் அவள் வழியிலேயே உயிரிழந்துள்ளாள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.