தொப்பூர் கணவாயில், லாரிகள் மோதி விபத்து

மும்பை, அக். 25-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திருச்சி மாவட்டம் முசிறிக்கு மக்காசோளம் பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி வயது 28 என்பவர் ஒட்டி வந்தார். அதே லாரியில் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மாற்று டிரைவர் வடிவேல் வயது 32 என்பவர் உடன் வந்தார். இந்த லாரி தர்மபுரி மாவட்ட தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியதில், முன்னாள் சென்ற லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மக்காசோளம் பாரம் ஏற்றி வந்த லாரியில் இருந்த டிரைவர்கள் காயம் ஏற்பட்டு விபத்தில் சிக்கி தவித்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து, விபத்தில் சிக்கி தவித்த டிரைவரைகளை மீட்டு சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் விபத்துக்குள்ளான லாரிகளை, மீட்பு குழுவினர் போலீசார் உதவியோடு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்