தொப்பூர் ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந் ஜெயந்தி விழா


தர்மபுரி,ஜன.13,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் மன்றோ குளக்கரையில் உள்ளது ஜெய் வீர ஆஞ்சநேயர் திருக்கோயில். இக்கோவிலில் நேற்று மார்கழி மாத அமாவாசை மற்றும் அனுமந் ஜெயந்தியையொட்டி மூலவருக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மகா தீபாரதனை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் சார்பில் மூலவருக்கு 10 ஆயிரம் வடை மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மூலவர் வடமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். நிகழ்ச்சியில் சேலம், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியோடு மூலவரை தரிசித்து சென்றனர். ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மற்றும் கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.