தொற்றுநோய்களை ஒழிக்க விழிப்புணர்வு அவசியம்: சுதாகர்

பெங்களூரு ஜூன் 16- மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்களை முற்றிலும் ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் கூறினார். 2025ஆம் ஆண்டுக்கான மலேரியா இலவசப் பயிலரங்கில் பேசிய அவர், மலேரியா அதிகம் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
முன்பு மலேரியாவுக்கு முறையான ஸ்கிரீனிங் அமைப்பு இல்லை. இதன் காரணமாகவே அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றார். 80 மற்றும் 90 களில், எந்த காய்ச்சல் வந்தாலும் முதலில் மலேரியாவாக இருக்குமா என்று பரிசோதிக்கப்பட்டது. அதுபோன்ற விழிப்புணர்வு காரணமாக மலேரியா கட்டுக்குள் அதைப்போலவே ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்தவொரு நோய் குறித்தும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது என அமைச்சர் வலியுறுத்தினார்.
மலேரியாவை ஒழிக்க மத்திய அரசு 2030ஆம் ஆண்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் நமது மாநிலத்தில் 2025-ம் ஆண்டு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசின் பணி, சங்கங்கள், அமைப்புகள், மக்களின் பங்களிப்புடன் இது சாத்தியமாகிறது. ஒவ்வொரு குடிமகனும் தன் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுதாகர் கேட்டுக் கொண்டார்.