தொழிலதிபரை ஆபாச வலையில் சிக்க வைத்த 4 பேர் கைது

பெங்களூர் : டிசம்பர். 16 – தன்னுடைய மனைவியை விதவை என்று கூறி அவரை கவனித்துக்கொள்ளுமாறு தொழிலதிபரிடம் விட்டு ஆபாச அவளையில் அவரை சிக்க வைத்த தம்பதி உட்பட நான்கு பேரை சி சி பி போலீசார் கைது செய்துள்ளனர். கலீம் , சபா , ஓபேத் ரகீம் மற்றும் அதீக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள். இவர்களில் கலீம் மற்றும் சபா ஆகியோர் கணவன் மனைவியாவார். இந்த கும்பல் அதியுல்லா என்ற தொழிலதிபரை குறிவைத்து அவரை ஆபாச வலையில் சிக்கவைத்துள்ளது. அதீவுல்லாவுக்கு தன்னுடைய மனைவியை விதவை என அறிமுகப்படுத்தி அவளை கவனித்துக்கொள்ளுமாறு கும்பல் கூறியுள்ளது. இந்த நிலையில் அதிவுல்லா மற்றும் சபாவுக்கிடையே உடல் உறவு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பின்னர் ராஜராஜேஸ்வரி நகரில் அறை பதிவு செய்ய ஆதார் அட்டையுடன் வருமாறு அதீவுள்ளவை சபா அழைத்துள்ளாள் . அதன் படி ராஜராஜேஸ்வரி நகருக்கு வந்த அதீவுல்லாவை அறை பதிவு செய்து அறைக்குள் சென்ற சில நிமிடங்களிலேயே கலீம் , ரதீப் , ஆதிக் ஆகியோர் அறைக்குள் நுழைந்துள்ளார் . பின்னர் அதீவுல்லாவை மிரட்டியுள்ளனர். பின்னர் அவரிடம் ஆறு லட்ச ருபாய் கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர் . கொடுக்க தவறினால் உன் விஷயத்தை உன் குடுமபத்தாரிடம் தெரிவித்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.. அதற்குள்ளாக தகவல் அறிந்து சோதனைகள் மேற்கொண்ட சி சி பி போலீசார் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இந்த கும்பல் வேறு சிலரையும் இதே போல் மிரட்டி பணம் வசூலித்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.