தொழிலதிபர் தற்கொலை லிம்பாவலிக்கு நோட்டீஸ்

பெங்களூர் : ஜனவரி 4 – கக்கலிபுரத்தில் தொழிலதிபர் பிரதீப் காரில் துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ராம்நகர் போலீசாருக்கு தற்கொலைக்கு முன்னர் பிரதீப் எழுதிவைத்துள்ள மூன்று வாக்குமூலங்கள் கிடைத்துள்ளன. இதற்கிடையில் அந்த வாக்குமூலங்களில் பிரதீப் தெரிவித்துள்ள எம் எல் ஏ லிம்பாவளி உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கக்கலிபுரா போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர். பிரதீப்பின் மனைவி மீதும் சில சந்தேகங்கள் இருப்பதால் சவிதாவின் போன் சி டி ஆர் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பிரதீப் தன நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கக்கலிபுரா அருகில் உள்ள ரிசார்டிற்கு சென்றுள்ளார். இரவு பார்ட்டி முடிந்த பின்னர் போதையில் இருந்த பிரதீப் காலை யாருக்கும் தெரியாமல் பெல்லந்தூரில் உள்ள தன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்தவர் தற்கொலைக்கு முடிவு செய்து வீட்டில் இருந்த அனுமதி பெற்ற துப்பாக்கியை எடுத்து கொண்டு தான் எழுதியிருந்த மூன்று மரணவாக்குமூலங்களில் ஒன்றை மனைவி சவீதாவின் அலமாரியில் வைத்துள்ளார். பின்னர் மீண்டும் ரிஸார்ட்டிற்கு சென்று உறவினர் காரின் முன்கண்ணாடி அருகில் வைத்து விட்டு மற்றொன்றை வங்கி ஆவணங்களுடன் இணைத்து வைத்து உள்ளார். இதை கவனித்த உறவினர்கள் ரிசார்டிலிருந்து வெளியேறிவிட்டனர். பிரதீப்பின் உறவினர்கள் சென்றுகொண்டிருந்த காரை ஓவர் டேக் செய்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நிட்டிகெரே என்ற இடத்தில் துப்பாக்கியால் தன் தலையில் சுட்டுக்கொண்டு பிரதீப் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் பிரதீப்பின் சார் அருகில் வந்து உறவினர்கள் பார்த்தபோது அவர் தற்கொலை செய்துரா கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.