பெங்களூரு, அக.4:-
அதிக அளவில் வருமான வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.தங்க வியாபாரிகள் உள்ளிட்ட தொழிலதிபர்களை குறிவைத்து 15க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த வரி ஏய்ப்பை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை மற்றும் டெல்லியில் இருந்து இரவோடு இரவாக நகருக்கு வந்த 15க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் குழு, இன்று காலை தொழிலதிபர்கள் மற்றும் தங்க வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி கோப்புகளை சோதனையிட்டது.
பெங்களூரில் 15 கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வருமான வரி ஏய்ப்பு செய்து தொழில் அதிபர்கள் வியாபாரிகள் சிக்கினர்.
வருமான வரித்துறையின் அதிகாரிகள் பெங்களூரில் 15 இடங்களில், தனியார் நிறுவனங்கள், அதன் உரிமையாளர் வீடுகளில் மற்றும் தங்க வியாபாரிகள் கடைகள் , வீடுகளில் ஐ.டி. எனும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினார்கள்.
இந்த வருமானத்துறை அதிகாரிகள் நேற்று இரவே, சென்னை, டெல்லி ஆகிய பெரு நகரங்களில் இருந்து வந்து, சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயநகர், பி. டி. எம்., லே அவுட், ஹுலிமாவு, சதாசிவா நகர், சாங்கே உட்பட பல பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரி செலுத்தாமல், வரிஏய்ப்பு செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள், தங்க வியாபாரிகள், பற்றிய விபரம் அறிந்து, அவர்களின் அலுவலகம் வீடுகளில் சோதனையை நடத்தினார்கள்.
விஜயநகர், பிரசாந்த் நகரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை பரிசீலனை செய்தனர்.
மேக்ரி சர்க்கிள் அருகே
கஜராஜ் ஜுவல்லரி கடையில் நுழைந்து, கடையை மூடிக்கொண்டு ஐ.டி. அதிகாரிகள் சோதனையை நடத்தினார்கள். ஆவணங்களை பரிசீலித்தார்கள்.
சாந்தி நகர் தொழிலதிபர் நவீன் வீட்டில் இரண்டு இன்னோவா கார்கள் மூலம் 8 அதிகாரிகள் வந்தனர் அங்குள்ள பெரிய சொகுசு பங்களாவில் நுழைந்து சோதனையை நடத்தினர்.
இதேபோல கடந்த 27 ம் தேதி பெங்களூரின் பல இடங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள ஹுலி மாவு அருகே ஆபீஸ் அபார்ட்மெண்ட் 14வது மாடியில் குடியுள்ள தொழிலதிபர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை பரிசோதனை நடத்தினார்கள்.