தோட்டத்திற்கு சென்ற பெண் மர்ம சாவு

பெங்களூரு, செப்டம்பர் 5- சன்னப்பட்டணா தாலுகாவின் தியாவபட்டனா கிராமத்தில் தோட்டத்திற்குச் சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் தியாவபட்னா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்வேதா(32) என்று தெரியவந்துள்ளது.
இவர் நேற்று காலை வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்வதாக கூறி சென்றார் ஆனால் மீண்டும் அவர் வரவில்லை. இன்று அதிகாலை இவரது தோட்டத்தில் பைப் லைன் குழியில் புதைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதற்கு முன், ஸ்வேதாவின் கணவர் குடும்பத்தினர், பலமுறை அவருடன் தகராறு என்றும் ஆக்கூர் காவல் நிலையத்திலும் மூன்று முறை சமரசப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்றும் மாமியார், மாமனார் மற்றும் கணவர் கொலை சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு எஸ்.பி., வரும் வரை, சடலத்தை அகற்ற மாட்டோம் என, பெண் குடும்பத்தினர் பிடிவாதம் பிடித்தனர்.ஆக்கூர் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். இந்த வடக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்