தோனி வீடியோ

ராஞ்சி,ஜன. 20- ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டியை பொறுத்தவரையில் கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது. இந்த நிலையில், அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போதே வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனது கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று டோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.