நகரின் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

பெங்களூரு : செப்டம்பர் . 15 – எதிர்பார்க்கப்படும் கொரோனா மூன்றாவது அலையின் பின்னணியில் பள்ளிகளில் இரண்டு நாட்களுக்கும் அதிகமாக கொரோனா அறிகுறிகள் தென்படும் மாணவர்களுக்கு கொரோனா சோதனை செய்ய மாநகராட்சி ஆணையர் கௌரவ் குப்தா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நகரில் இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து குழந்தைகள் நிபுணர்கள் குழு மற்றும் தொழில் நுட்ப குழுவுடன் கூட்டம் நடத்திய பின்னர் கௌரவ குப்தா பேசுகையில் மாநகராட்சி எல்லையில் குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை தவிர்க்க நகரின் அனைத்து பள்ளிகளிலும் நோடல் அதிகாரிகளை நியமித்து இரண்டு நாளுக்கும் அதிகமாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் உள்ள குழந்தைகளை கொரோனா சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.