நகரில் காணாமல் போகும்குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பெங்களூர் : பிப்ரவரி. 7 – நகரில் குழந்தைகள் காணாமல் போகும் புகார்கள் அதிகரித்து வருவது பெரும் கவலை தரும் விஷயமாயுள்ளது . ஆண்டாண்டுக்கு அதிகரித்துவரும் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய புகார்கள் குறித்து விழிப்படைந்துள்ள போலீசார் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியில் இறங்கியுள்ளனர். தந்தை டி வி ரிமோட் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்க்காக , மற்றும் பள்ளி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவில்லை ,மற்றும் வீட்டில் தாய் தந்தைக்கிடையே நடக்கும் சண்டையை பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு குழந்தைகள் ஓடி செல்வது வருத்தத்தை தந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இப்படி காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை சதவிகிதம் 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2020ல் காணாமல் போன 421 ஆண் மற்றும் 1136 பெண் குழந்தைகளில் 21 ஆண் மற்றும் 37 பெண் குழந்தைகள் இன்னமும் கண்டுபிடிக்கமுடியவில்லை. குழந்தைகள் காணாமல் போவதற்கு குடும்ப பிரச்சனைகளே முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. குடும்ப தகராறு மற்றும் கல்வி அழுத்தம் ஆகிய காரணங்களால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறிவிடுகின்றனர். கொரோனாவிற்கு பின்னர் கல்வி முறையில் அழுத்தங்கள் வந்துள்ள நிலையில் வீட்டிலும் தங்கள் குழந்தைகளை அதிக மதிப்பெண் எடுக்க வற்புறுத்துவதும் குழந்தைகள் வீட்டை விட்டு ஓடி போக காரணாமாக உள்ளது. தவிர வீட்டில் குழந்தைகளுடன் பொழுது கழிப்பதையும் பெற்றோர் குறைத்து வருவது குழந்தைகளின் ஆதங்கத்திற்கு காரணமாகிறது. இப்படி காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதாகும் போலீசுக்கு சவாலாக உள்ளது. 100 பேரில் வெறும் 85 குழந்தைகள் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் மற்றவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இப்படி ஒரு முறை வீட்டை விட்டு செல்லும் குழந்தைகளுக்கு இதுவே பழக்கமாகிவிடும் பட்சத்தில் இது குறித்து பெற்றோர் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.