நகரை விட்டு வெளியேற காசா மக்களுக்குஇஸ்ரேல் கெடு

டெல் அவில் அக்டோபர் 13
காசா நகர் மீது தீவிர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இப்போது அந்த நகரில் இருந்து மக்கள் கூண்டோடு வெளியேற வேண்டும் என்று கேடு விதித்து உள்ளது.
வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்கள் பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள மக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இதன் மூலம் காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவின் வடக்கு பகுதியில் இருந்து 24 மணி நேரத்தில் 11 லட்சம் பாலஸ்தீனர்கள் தெற்கு பகுதிக்கு செல்வது சாத்தியமற்றது. மேலும், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
அடுத்து 24 மணி நேரத்தில் மக்கள் அனைவரும் வெளியார வேண்டும் என்று இஸ்ரேல் கூறி இருப்பது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது காசா மீது இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது