நகை கடையில் 3 முறை துப்பாக்கிச் சூடு பெங்களூரில் சினிமா போல் சம்பவம்

பெங்களுர் மார்ச். 15 – நகரின் கொடிகேஹள்ளி அருகில் தேவி நகரில் உள்ள லக்ஷ்மி பேங்கர்ஸ் அண்டு ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடைக்குள் நுழைந்த நான்கு பேர் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் கடை உரிமையாளர் உட்பட இரண்டு பேர் காயங்கலடைந்துள்ளனர் . நேற்று வியாழக்கிழமை காலை 11 மணியளவி நடந்த இந்த கடை உரிமையார் ஹாஷுராம் (38) மற்றும் அனந்தராம் (21) ஆகியோர் காயங்காடைந்துள்ளனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.ஹெல்மெட் அணிந்த நான்கு பேர் இரண்டு வாகனங்களில் வந்துள்ளனர். இதில் ஒருவன் கடைக்கு வெளியே நின்றுள்ளான் . மூன்று பேர் கடைக்குள் நுழைந்துள்ளனர் . அனைத்து தங்க நகைகளையும் எடுத்து கொடு என கூச்சலிட்டுள்ளனர். இதற்ற்கு ஒப்பாத கடை உரிமையாளர் ஹாஷுராம் நகைகள் எதுவும் தரமுடியாது புறப்பட்டு செல்லுங்கள் இல்லையெனில் போலீசுக்கு தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார். கடை உரிமையாளர் மற்றும் கொள்ளையர்களுக்கிடையே சிலநேரம் வாக்கு வாதம் நடந்துள்ளது.பின்னர் குற்றவாளிகளை பிடிக்க உரிமையாளரும் ஊழியரும் முயன்றுள்ளனர். அப்போது ஒருவன் துப்பாக்கியால் கடை உரிமையாளர் ஹாஷுராம் வயிற்றில் சுட்டுள்ளான். இன்னொருவன் அனந்தராம் காலில் சுட்டுள்ளான். இதே வேளையில் வெளியே இருந்த மற்றொருவன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் வானம் நோக்கி சுட்டுள்ளான். துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நான்கு பெரும் வாகனங்களில் தப்பி சென்றுள்ளனர். குற்றவாளிகள் நகைகளை கொல்லலையடிக்க வந்தது போல் தோன்றினாலும் இது தனிப்பட்ட வகையால் நடந்த சம்பவம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் யாரும் கடையிலிருந்து நகைகளை எடுத்து செல்ல வில்லை தவிர கடை உரிமையாளரை கொலை செய்யவும் இவர்கள் வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. கடை உரிமையாளர் சிலரிடம் பகைமை வளர்த்திருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.அத்தகையவர்கள் கூலி கொடுத்து இவரை முரசித்திருக்கக்கூடும் என்றும் சிலர் கருதுகிறார்கள். உண்மை என்ன என்பது போலீஸ் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்