நடவடிக்கை எடுக்காத தாசீல்தார் சஸ்பெண்ட்

பெங்களூர் : நவம்பர். 24 – மழை நீர் தேங்கி ரெயின்போ ட்ரைவ் லே அவுட்டில் மக்கள் அவஸ்தைகளுக்குள்ளானது நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது இந்த லே அவுட் ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருப்பினும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய குற்றச்சாட்டின் பேரில் கே ஆர் புரம் தாசீல்தார் அஜித் ராய் பணியிடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.சரியான வகையில் விசாரணை நடத்தாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவியாய் இருந்ததுடன் தன்னுடைய பணியில் அலட்சிய போக்குடன் செயல்பட்ட்டதற்காக நகர அபிவிருத்தி துறையின் பெங்களூரு கிழக்கு தாலூகா (கே ஆர் புரம் ) தாசீல்தார் அஜித் ரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் மழையால் சர்ஜாபுரா வீதியில் உள்ள ரெயின்போ ட்ரைவ் லே அவுட் முழுதும் மழை நீரால் நிரம்பி வெள்ளம் போல் நிலைமை உருவானதுடன் இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தபோது மழை நீர் ராஜ கால்வாய் ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதற்க்கு பின்னர் இங்கு அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புகளை காலி செய்யுமாறு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதில் தாசீல்தார் தயக்கம் காட்டியுள்ள நிலையில் இன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்