
சென்னை:நவ 20- அரசியல் அங்கீகாரம் இல்லாத எந்த சாதிக்கும் மரியாதை இருக்காது.எனவே, வரும் தேர்தல்களில் பிராமணர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் வலியுறுத்தினார். ‘தமிழகத்தில் பிராமணர்கள் எதிர்காலம்’ என்ற தலைப்பிலானகருத்தரங்கம் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக நடிகரும், பாஜக ஆதாரவளருமான எஸ்.வி.சேகர் பங்கேற்றுப் பேசியதாவது: தாய், தந்தை, சாதி, மதம் போன்றவற்றை நம்மால் தீர்மானிக்க முடியாது. இறைவன்தான் தீர்மானிப்பார். ஒருவர் தேவையின்றி மதம் மாற வேண்டியதில்லை. ஒவ்வொரும் தங்களது சமூகத்தின் பெருமைபற்றி பேசலாம். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அடுத்த சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசக்கூடாது. தமிழகத்தில் பிராமணர்கள் 45 லட்சம் பேர் உள்ளனர்.