நடிகைக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய நபர் கைது

பெங்களூர்: நவ. 4 –
பிரபல சின்னத்திரை நடிகைக்கு பேஸ்புக்கில் ஒருவர் அவருக்கு ஆணுறுப்பை வீடியோ எடுத்து அனுப்பியதோடு, ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி திட்டி உள்ளார். அந்த நபரை நடிகை பிளாக்’ செய்தாலும், வெவ்வேறு பேஸ்புக் முகவரியில் இருந்து இப்படி தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன நடிகை அளித்த புகாரில் அந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் வசித்து வருபவர் 41 வயது நடிகை. இவர் கன்னடா மற்றும் தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான் பேஸ்புக் மூலமாக அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. அவருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியும், அவரது வீடியோவை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியும் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த நடிகை அவருக்கு வார்னிங் செய்தார். இப்படியெல்லாம் மெசேஜ் அனுப்ப கூடாது. மீறினால் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் கேட்கவில்லை. தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பி உள்ளார். ஆபாச வீடியோக்கள், போட்டோக்களை அனுப்பி உள்ளார். அதுமட்டுமின்றி அந்த நபர் தனது அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். கடந்த 1ம் தேதி மீண்டும் அந்த நபர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினார். இதையடுத்து நடிகை, அந்த நபருக்கு ரீப்ளை அனுப்பினார். அப்போது நாகரபாவி 2வது ஸ்டேஜில் உள்ள நந்தன் பேலஜில் இருவரும் சந்திக்கலாம். வர முடியுமா? என்று கேட்டார். அதற்கு அந்த நபர் பயந்துபோய் மறுத்துவிட்டார். இதையடுத்து ஆபாசமாக மெசேஜ் செய்ய வேண்டாம் என்று மீண்டும் அறிவுரை வழங்கினார். ஆனால் அந்த நபர் கேட்கவில்லை. தொடர்ந்து ஆபாசமாக வீடியோக்கள் அனுப்பி உள்ளார்.
இதுபற்றி நடிகை சார்பில் பெங்களூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில், சமீபத்தில் எனக்கு பேஸ்புக்கில், Naveenz’ என்ற பெயரில் ஃப்ரண்ட் ரெக்வொஸ்ட்’ வந்தது. அதனை நான் ஏற்கவில்லை. அவர் யார் என்று எனக்கு தெரியாதாதல் நான் அந்த ரெக்வெஸ்ட்டை ஏற்கவில்லை. ஆனால் அந்த நபர் மெசேஞ்சர் மூலமாக மெசேஜ் அனுப்பினார். எனது ஆபாசமான போட்டோ, வீடியோவை அவர் அடிக்கடி எனக்கு அனுப்பி தொல்லை கொடுத்தார். மேலும் அவரது அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து அனுப்பினார். நான், அந்த நபரை பிளாக் செய்தேன். ஆனால் அவர் இன்னும் சில புதிய ஐடிகளை ஓபன் செய்து தொடர்ந்து தொல்லை தந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் நவீன் கே மோன் என்பது தெரியவந்தது. அவர் குளோபல் டெக்னாலஜி என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் டெலிவரி மேனேஜராக பணியாற்றியது தெரியவந்தது. லண்டன், பாரீஸ், பெர்லிஜி், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் அலுவகங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.