நடிகையை விவாகரத்து செய்த ஒளிப்பதிவாளர்

கொச்சி: ஏப்.3- பிரபல ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ். கேரளாவை சேர்ந்த இவர், லூசிஃபர் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம், லிங்குசாமி இயக்கிய, தி வாரியர் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், தெலுங்கு படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத்தில் 2 படங்களை இயக்கியும் உள்ளார்.
இவர் மலையாள நடிகை மஞ்சு பிள்ளையைக் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு தயா என்ற மகள் உள்ளார். மஞ்சு பிள்ளை, தமிழில் சினேகிதியே, மன்மதன் அம்பு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மஞ்சு பிள்ளையை விவாகரத்து செய்துவிட்டதாக, சுஜித் தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்வதாகவும் கூறியுள்ளார். சுஜித் வாசுதேவ், இப்போது லூசிஃபர் 2 படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார்.