நடிகை சஞ்சனாவுக்கு கொலை மிரட்டல்

பெங்களூர் : மார்ச். 16 – சினிமாத்துறையிலிருந்து விலகி தன குழந்தையை பராமரிப்பதில் முழுதுமாக ஈடுபட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது தொடர்பாக இந்திராநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது . கொலை மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ள சஞ்சனா சட்டப்படி குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார். வாகனம் நிறுத்துவது தொடர்பாக உள்ளூர் வாசிகளிடம் வாக்கு வாதங்கள் நடந்துள்ள நிலையில் இதில் சிலர் சஞ்சனாவை கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர். இந்திராநகரின் தூபனஹள்ளியில் வசித்து வரும் சஞ்சனா கல்ராணி வீட்டின் அருகில் யசோதம்மா மற்றும் ராஜன்னா ஆகியோரும் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு எதிராகவும் சஞ்சனா புகார் அளித்துள்ளார். . யசோதம்மா மற்றும் ராஜன்னா இருவரும் தங்கள் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்துவதாகவும் இது குறித்து கேள்வி கேட்டதற்கு தன்னை கொலை செய்வதாகவும் நாங்கள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வருபவர்கள் என மிரட்டியதுடன் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டினர் என சஞ்சனா தன புகாரில் தெரிவித்திருப்பதுடன் இது விஷயமாக தற்போது போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது.