நடிகை டாப்ஸி ரகசிய திருமணம்

மும்பை, மார்ச் 26-தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி.
தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’ உட்பட பல படங்களில் நடித்த டாப்ஸி, இப்போது இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஷாருக்கானுடன் நடித்த ‘டங்கி’ படம் கடந்த ஆண்டு வெளியானது. இவர், டென்மார்க்கை சேர்ந்த பாட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ் போ என்பவரைக் கடந்த 10 வருடங்களாகக் காதலித்து வருகிறார்.
இவர்கள் திருமணம் மார்ச் இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இவர்கள் திருமணம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சில திரைபிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.