நடிகை மீரா மிதுன் டில்லியில் கைது

சென்னை: ஆகஸ்ட் 5-பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டிகை மீரா மிதுன் டில்லியில் கைது செய்யப்பட்டு, டில்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நடிகையும், ‘மாடல்’ அழகியுமான மீரா மிதுன், 34, பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், ‘வீடியோ’ வெளியிட்டார். இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள், அவர் மீது போலீசில் புகார் அளித்தன.இப்புகார் குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த 2021 ஆகஸ்டில் கைது செய்தனர். பின், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது, மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து, 2022 ஆக., 6ல் மீரா மிதுனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத,‘வாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டது. பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து, மூன்று ஆண்டுகளான நிலையில், தனிப்படை போலீசாரால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.