நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி ஒருவர் மீது தீவைப்பு

பெங்களூரு, ஏப். 22: தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள சாந்தப்பூரில், ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
நிலத் தகராறில், சித்தப்பாவின் மீது தீ வைத்த குற்றவாளி மகனின் கொடூரச் செயல் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய சின்னவனை (55) அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சித்தப்பா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த செந்திலை (26) கைது செய்ய காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த சில வருடங்களாக இரு குடும்பங்களுக்கு இடையே நிலவி வந்த தகராறு பூதாகரமாக மாறி, மனிதாபிமானம் இல்லாத இதுபோன்ற செயல் நடந்துள்ளது. சின்னவனின் பண்ணை வழியாகத்தான் செந்தில் பண்ணைக்கு பயணிக்க வேண்டும். சின்னவன் குடும்பத்தினர் அவர்களை தங்கள் நிலத்தில் நடமாட விடாமல் தடுத்துள்ள‌னர்.
இது தொடர்பாக கடந்த நவம்பர் 19ஆம் தேதி இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து செந்திலின் குடும்பத்தினர் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அன்றிலிருந்து சின்னவன் குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர்.
நேற்று காவேரிப்பட்டணம் கடை அருகே சின்னவன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சின்னவன் மீது பாட்டிலில் இருந்த பெட்ரோலை செந்தில் ஊற்றி தீ வைத்தார். தீயில் கருகிய சின்னவனை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.