நடுவானில் குலுங்கிய விமானம்

வாஷிங்டன், மார்ச் 4- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 469 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு விமானம் ஜெர்மனிக்கு புறப்பட்டது. கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. இதில் பயணிகள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். பயணிகள் அனைவரும் பயத்தில் கூச்சலிட்டனர். விமானம் குலுங்கியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். பின்னர், காயம் அடைந்த 7 பயணிகளும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.