நட்சத்திர ஆமைகள் கடத்தல் 4 பேர் கைது

மடிகேரி.நவ.22.-

காரில் கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடகு மாவட்டம் மடிகேரி ஆர்.எம்.சி யார்ட் அருகே இவர்கள் சிக்கினர் இவர்கள் பெங்களூரிலிருந்து வந்தது தெரியவந்தது கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள்..ஆர்.லட்சுமிநாராயணா, டி.லக்ஷ்மன், இ.திம்மப்பா எஸ்.நாகேஷ் என்றும் இவர்கள் ஆந்திரா தெலுங்கானா மற்றும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்தது
நட்சத்திர ஆமைகளை இவர்கள் காரில் ஆந்திராவில் இருந்து கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடத்தி வந்துள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். .