நட்டாவுக்கு பிஜேபி எம்பி கவுதம் காம்பீர் கடிதம்

புதுடெல்லி, மார்ச் 2- அரசியல் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நட்டாவுக்கு பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அரசியலில் களமிறங்கினார். பாஜக சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர்,
கிழக்கு டெல்லி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது டிவி நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் தொடர்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அரசியல் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நட்டாவுக்கு பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் கடிதம் அனுப்பியுள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதால் அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கவேண்டும். மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.