
உத்தரகாண்டம் : அக்டோபர் : 25 – நதியில் கார் உருண்டு விழுந்ததால் பெங்களூரை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் இறந்துள்ள துயர சம்பவம் இம்மாவட்டத்தின் லகண்புறா அருகில் நடந்துள்ளது . ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் காளி நதியில் விழுந்ததால் பெங்களூருவை சேர்ந்த இரண்டு பேர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த இரண்டு பேர் மற்றும் உத்தராகண்டனாவை சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கைலாச தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பிவரும்போது இந்த விபத்து நடந்துள்ளது. உத்தரகாண்டா முதல்வர் புஷ்கர் சிங்க் தாமி இந்த விபத்து குறித்து தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இருட்டு மற்றும் நதியில் இருந்த அசாதாரண சூழ்நிலைகளால் இறந்தவர்கள் உடல்கள் உடனே மீட்கப்பட வழியில்லாமல் போனது. இன்று அதிகாலை முதல் உடல்களை மீட்கும் பணி துவங்கியுள்ளது.இதே போன்ற சம்பவம் பத்து நாட்களுக்கு முன்னர் நடந்துள்ள நிலையில் உத்த்ரகண்டாவின் டெஹ்ரா டூன் மாவட்டத்தின் சக்ரதா பகுதியில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவை சேர்ந்தவர்கள் பயணித்த ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி ஆழத்தில் விழுந்துள்ளது.இதில் வாகனத்தில் இருந்த அபைவரும் உயிரிழந்துள்ளனர். தற்போது நடந்துள்ள விபத்தில் இறந்தவர்கள் சிம்லா வை சேர்ந்த ராகேஷ் குமார் (26) , சுர்ஜீத் சிங்க் (35) மற்றும் ஷ்யாம் சிங்க் (48) என அடையாளம் தெரியவந்துள்ளது.