நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி


கொல்கத்தா மே 2- நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் மம்தா பானர்ஜி 1622 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திருணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதை அடுத்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், “மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.
அதேபோல இன்று காலை முதலே தனது நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளரை விட பின்தங்கியே இருந்தார். ஆனால் மதியத்திற்கு பிறகு, 16 வது சுற்றுக்குப் பிறகு, முன்னிலை பெற்ற மம்தா பானர்ஜி, மீண்டும் பின்னடைவை சந்தித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திருணாமூல் காங்கிரஸ் அதிக பெரும்பான்மையை பெற்று முன்னிலை பெற்றிருந்தாலும், அம்மாநில முதலமைச்சரான மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவிகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி 1,622 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.