நந்தி மலையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்க முடிவு

பெங்களூரு, செப். 1: நந்தி மலையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பிரபலமான வார இறுதி நாட்களை கழிக்க தகுந்த இடமான நந்தி மலைக்கு தனியார் வாகனங்கள் நுழைவதை தடை விதிக்க முடிவு செய்துள்ளது. பெங்களூரிலிருந்து வரும் வாகனங்களால் பம்பர்-டு பம்பர் டிராஃபிக்கைக் காண்கின்றன. எனவே அதற்கு மாற்றாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்காக மின்சார பேருந்துகளை இயக்கப்பட உள்ளது.அடுத்த 6-8 மாதங்களில் நந்தி மலையை ஒரு நாள் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் சுற்றுலாத் துறையின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அனுபவிக்க ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கும். அதோடு சாகச விரும்பிகள் நந்தி மலைக்கு செல்ல கேபிள் கார் வசதி செய்யப்பட உள்ளது.
ஆரம்ப மதிப்பீடுகளின்படி, கேபிள் காரில் சவாரி செய்வதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.250-300 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் பெங்களூருவாசிகளுக்கான சுற்றுலாத் தலமாக நந்தி மலையை மேம்படுத்தி வருகிறோம். மேலும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போகன் நந்தீஸ்வர கோவிலுடன் இரவு விளக்குகள் மற்றும் ஒலி-ஒளி காட்சிகள் உள்ளன.
பாரம்பரியத்தை மையமாக வைத்து சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த இடம் உருவாக்கப்பட்டு வருகிறது. தொல்லியல் மற்றும் சுற்றுலாவின் சாகச அம்சங்கள் இங்கு இடம்பெற உள்ளது என்று கூடுதல் தலைமைச் செயலாளர் கபில் மோகன் தெரிவித்தார்.
நந்தி மலை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக கருதப்படுவதால், புத்தாண்டு மற்றும் பிற முக்கிய விடுமுறை நாட்களில் மலையை சமவெளியுடன் இணைக்கும் 2 கிமீ நீளத்திற்கு பைக்கர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைவதை காவல்துறை ஏற்கனவே தடை செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதிசெய்ய, மலைப்பகுதிக்குள் தனியார் வாகனங்கள் நுழைவதைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மாறாக, மலையடிவாரத்தில் இருந்து மேல் பகுதிக்கு மக்களை அழைத்துச் செல்ல சிறிய மின்சார பேருந்துகள் சேவையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.