நயன்தாராவின் அடுத்த த்ரில்லர் படம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நயன்தாரா அடுத்ததாக திரில்லர் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக படங்கள் நடித்து வருகிறார். நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் நடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் நயன்தாரா, கடந்தாண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்த ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா, மலையாளத்தில் உருவாகும் ‘நிழல்’ என்ற திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் நாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். குஞ்சாக்கோ போபனும் நயன்தாராவும் ஏற்கனவே டுவென்டி 20 படத்தில் ஒரு பாடல் காட்சியில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர்.
இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என. தான் பரிந்துரைத்ததாக குஞ்சாக்கோ போபன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக, நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்கும்படி மலையாள தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து மோகன்லால், டோவினோ தாமஸ் உள்பட பல முன்னணி தங்கள் சம்பளத்தை குறைத்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்துக்காக நடிகை நயன்தாராவும் சம்பளத்தைக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.