
பெங்களூர் அக்.27-
நர்சிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்று இருப்பதை மாநில நர்சிங் தேர்வு வாரியம் கண்டுபிடித்து உள்ளது.சேர்க்கை நடந்து முடிந்த நிலையில் இவ்வாறு உருவாக்கப்பட்ட இருக்கைகளுக்கு நர்சிங் பள்ளியில் நடத்துபவர்கள் உண்மையான மாணவர்களை முறைகேடாக பதிவு செய்து உள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெனரல் நர்சிங், ஜி .என் .எம்., மற்றும் டிப்ளமோ படிப்புக்கு 2022 மாணவர்களுக்கான சேர்க்கை, டிசம்பர் 31 ல் முடிவடைகிறது. ஆனால் பதிவு செய்யப்பட்ட 236 மாணவர்களுக்கு, பதிலாக போலி பெயர்பதிவு செய்துள்ளனர்.ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதங்களில் மற்ற மாணவர்கள் எல்லாம் பதிவு செய்துள்ளனர். அதே போல் சிலரின் போலி பெயரில் பதிவு செய்து எண் உருவாக்கி பெயர் சேர்த்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்புக்கு சட்ட விரோதமாக பதிவு செய்யும் ஒவ்வொரு மாணவரிடம் நர்சிங் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் என மூன்று ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
வாரிய ஊழியர்கள் ஒவ்வொரு மாணவரிடமும் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை வசூலித்து பதிவுக்காக பங்கிட்டு கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வாரிய தலைவரான மருத்துவ கல்வித் துறை இயக்குனர் , குழுவின் சிறப்பு அதிகாரி டாக்டர் சுஜாதா ராத்தோட் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கர்நாடகா நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்வி ஒழுங்குமுறை ஆணையர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மாணவர்கள் பெயர் மாறியது உண்மைதான். சம்பந்தப்பட்ட நர்சிங் பள்ளிகளிடம் விரைவில் விளக்கம் பெறுமாறு வாரிய செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம் செய்யப்பட்ட நர்சிங் பள்ளிகளுக்கு வாரியத்தின் செயலாளர் கடிதம் எழுதி அனைத்து தகவல்களுடன் விளக்கம் கேட்டுள்ளார். பெயர்களில் எழுத்துப் பிழை திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் முழு பெயரும் மாறிவிட்டதாக தெரிகிறது. பெயர் மாற்றம் குறித்து உரிய விளக்கம் அளிக்காவிட்டால் மாணவர் பதிவு ரத்து செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் ஆன்லைனில் பதிவில் 2023 செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை நடைபெற்றது. அதன்படி உரிய ஆவணங்களும் டிசம்பர் 31ல் பதிவு செய்யலாம் ஒரிஜினல் ஆவணங்களை மார்ச் 5 முதல் 15க்குள் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சில பள்ளி வாரிய ஊழியர்கள் உதவியுடன் தான் ஆன்லைன் முன்னர் வழங்கப்பட்ட பெயர்களை மாற்றி உள்ளனர். இது மேலிடம் கவனத்திற்கு வராமல் கீழ்மட்ட அளவிலேயே ஊழியர்கள் முறையீடு செய்துள்ளனர்.