நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடில்லி: செப்.5- ஜனாதிபதி மாளிகையில், தேசிய நல்லாசிரியர்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் 45 பேருக்கு விருதுகளை வழங்கி, ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டினார்.
ஆசிரியர் தினத்தன்று, சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுக்காக, இணையதளம் வாயிலாக நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இன்று(செப்.,05) ஜனாதிபதி மாளிகையில், தேசிய நல்லாசிரியர்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை, ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி, பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.