நல்ல வேலை செய்பவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை- கட்காரி வேதனை

புது டெல்லி . பிப்ரவரி . 7 – நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நாட்டில் நன்கு உழைப்பவர்களுக்குஅவர்களுக்கு ஏற்ற கெளரவம் மற்றும் மரியாதை கிடைப்பதில்லை. அதே வேளையில் தவறிழப்பவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பித்து விடுகின்றனர் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வேடிக்கையுடன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது பற்றி நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன் . நான் எந்த தனி நபரையும் குறியீட்டு பேச வில்லை. எந்த ஆட்சி மத்தியில் நடந்தாலும் நல்ல ஊழியர்களுக்கு நேர்மையான ஊழியர்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கெளரவம் கிடைப்பதில்லை. இதே வேளையில் தவறான பணி செய்பவர்களுக்கு தண்டனையும் கிடைப்பதில்லை. தவிர ஆட்சியில் உள்ள கட்சியுடன் நெருக்கம் கொள்ளும் சந்தர்பவாத தலைவர்கள் குறித்தும் கவலை அளிக்கிறது. கருத்து வேறுபாடுகள் என்பது விவாதலின் போது பிரச்சனை இல்லை. நமக்கு தெளிவான அறிவு இல்லாததே அனைத்திற்கும் காரணம். ஆனாலும் சிலர் தங்கள் கொள்கைகளில் உறுதியாக நிற்கிறார்கள். ஆனால் அத்தகையோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. நாம் இடது சாரியோ அல்லது வடது சாரியோ ஆனால் அனைவரும் சந்தர்ப்பவாதிகள். அனைவருமே ஆளும் கட்சியுடன் நட்புடன் இருக்கவே விரும்புகின்றனர். இந்தியா ஜனநாயகத்தின் தாய்நாடு . இதனாலேயே நம்முடைய ஆட்சி முறைகள் உலகின் வெளி நாடுகளுக்கு ஏதுவாக உள்ளது. பிரபலம் மற்றும் விளம்பரம் முக்கியமென்றாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் சீரிய பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு கட்காரி கூறினார்