நவீன் குடும்பத்தாருக்கு பிரதமர் மோதி ஆறுதல்

பெங்களூர்: ஜூன். 20 – ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கிடையேயான போரில் இறந்த எம் பி பி எஸ் மாணவர் கன்னடிகன் நவீன் குடும்பத்தாரை பிரதமர் நேரில் சந்தித்து தன் அனுதாபங்களை தெரிவித்தார். கொம்மகட்டாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் உக்ரேனில் இறந்த ஹாவேரி மாவட்டத்தின் ராணிபெண்ணூர் தாலூகாவின் சலகேறி கிராமத்தில் வசித்துவந்த நவீன் ஞான கௌடரின் தந்தை சேகரப்பா ஞான கௌடரை பிரதமர் மோதி மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்தனர். பிரதமர் மோதி நவீனின் தந்தை தாய் , சகோதரன் ஆகியோருடன் நான்கைந்து நிமிடங்கள் பேசினார். பிரதமர் மோதியின் சந்திப்புக்கு பின்னர் நவீனின் தந்தை சேகர் கௌடா தகவல் அளித்தார். எங்களின் கண்ணீரை கண்டு பிரதமர் நரேந்திர மோதி உணர்ச்சிவசப்பட்டார். மகனின் சாவு துக்கத்திலும் மகனின் உடலை தானம் செய்ததற்கு பிரதமர் பாராட்டுகள் தெரிவித்தார். நவீன் இறந்த உடனேயே நான் வரவேண்டியிருந்தது. ஆனால் இப்போது காலம் கனிந்துள்ளது . நவீனின் சகோதரன் ஹர்ஷாவும் பிரபலமாக உள்ளான். தவிர உக்ரேனிலிருந்து வந்துள்ள எம் பி பி எஸ் மாணவர்களுக்கு தொடர் கல்வி குறித்து வசதி செய்து தருமாறு கேட்டுள்ளோம். அதற்க்கு பிரதமர் முயற்சி செய்வதாக நம்பிக்கை அளித்துள்ளார். எங்களை தைரியத்துடன் இருக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி உற்சாகம் ஊட்டினார் என நவீனின் தந்தை தெரிவித்தார்.